மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி – சிதம்பரம் செல்லும் சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் ரயில் வருவது அறிந்து ரயில் கேட் கீப்பர் கேட்டை மூடும் போது அப்பொழுது மூங்கில் கலிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கேட்டில் மோதி நின்றதால் கேட் பழுதாகி மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் ரயில் வந்து கொண்டிருக்கும் போது என்ன செய்வதென்று தெரியாமல் கேட்டுப்பார் அவசர அவசரமாக மூங்கில் கலி ஏற்றி வந்த வண்டியை பின்னால் தள்ளி தற்காலிகமாக உள்ள கேட்டை மூடி ரயில் செல்வதற்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை கேட் கீப்பர் செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
