சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை, சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில் மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை, சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்து . யாகசாலையில் 6 குண்டங்கள் அமைத்து கடந்த 11 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதணை நடைபெற்றது. தொடந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் விமானத்தை அடைந்தது. அங்கே சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மகா கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
