விழுப்புரம் திரு.வி.கா. வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன்ராஜ், இன்று காலை பள்ளிக்குச் சென்ற சில நிமிடங்களில் திடீரென உயிரிழந்தார்.
காலை 7 மணி அளவில் பள்ளிக்கு வந்த மோகன்ராஜ், உணவு உண்ணாமல் வந்ததுடன் தாமதமாக வந்ததால் பத்து நிமிடங்கள் பள்ளி வளாகத்தில் நிற்கவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்குச் அதிக சுமை கொண்ட புத்தகப் பையை தூக்கி ஏறிச் சென்றுள்ளார். இதன் பின்னர், வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உடல், பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவர்கள், மோகன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 18 வயதிற்குக் குறைவானவர்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படாது; 18 வயதுக்கு மேற்பட்டவர்களில்தான் அவை தென்படும் எனவும் விளக்கமளித்துள்ளனர்.
இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.