- ஆயுள் தண்டனை கைதிகள், நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள் வரை தண்டனையை அனுபவித்துவிட்டால், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்த, ‘முத்தலாக்’ உள்ளிட்ட பழைய சட்டங்களை நீக்கிவிட்டு, புதிய கிரிமினல் சட்டங்கள் தொடர்பான பாடங்கள், வரும் 2026 – 27 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
- பாகிஸ்தான் ராணுவ தளபதி, அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஆகியோர் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக போர் மிரட்டல் விடுத்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் இருந்து நீரை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.
- அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் போலீஸ் துறை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், குற்றங்கள் அதிகரித்ததாக கூறி அத்துறையை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
- இந்தியாவில் முதல் பல்நோக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கி ஏவுவதற்கு, தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு இன்-ஸ்பேஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
- புதிய வருமான வரி மசோதாவில் புதியதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை, என ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதன் பிறகு, இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தங்கள் நாட்டு பக்தர்கள் செல்வதை புனித யாத்திரையாக அங்கீகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
- யாரும் , யாருக்கும் அடிமையில்லை என இபிஎஸ்க்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- ‘உயர்ந்த இலக்கை அடையுங்கள், பெரிய கனவு காணுங்கள், நினைவில் கொள்ளுங்கள்’ என வானியல் ஒலிம்பியாட் விழாவில், இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
- அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது. அவரை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது , என தேர்தல் கமிஷனுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.