பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள “முருகன் வரலாறு” என்ற நூலில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களும் கருத்துகளும் இடம்பெற்றிருப்பதை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
“பழநி முருகன் கோயிலில் வழிபாடு செய்யச் செல்லும் பக்தர்களிடம், ரூ.2,700 மதிப்பில் ‘முருகன் வரலாறு’ என்ற பெயரில் முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் புகைப்படங்களும் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ்பாடப்படுவது, அவர் எப்போது முருகராக மாறினார் என்ற கேள்வியை எழுப்புகிறது” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில், ஆண்டவர்களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது” என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
















