மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற கூட்டத்தில் 600-க்கு மேற்பட்டோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இக்கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமை வகித்து, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் அறிவரசன், அமீன், அபிராமிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிப் பேசினர். இதில், மூன்று தொகுதிககளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
