- பிரதமரை சந்திக்கும் விவகாரத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
- மீன்பிடி தடை காலத்தின் போது, மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல, மழை காலத்தில் உப்பளம் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
- டிஐஜி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
- உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- ராகுலின் பொறுப்பற்ற தலைமை, அவரது கட்சியையும், நாட்டையும் காயப்படுத்துகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை.
- மும்பையில் இருந்து கோல்கட்டா சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர், சக பயணியை தாக்கிய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளின்படி, தாக்குதல் நடத்திய நபர், இண்டிகோ விமானங்களில் இனி பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- அடுத்த இரண்டாண்டுகளுக்குள் ஆந்திராவின் சாலை உள்கட்டமைப்பை அமெரிக்காவைப் போல் மேம்படுத்துவோம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.
- ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
- அமெரிக்காவுடனான நமது பொருளாதார உறவு மிக முக்கியமானது என காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.