முதலமைச்சர் ஸ்டாலின் பெயரோ முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படமோ அரசின் திட்டங்களில் இடம்பெறக்கூடாது என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் தீர்ப்பு வழங்கி உள்ளது நாளை தமிழ்நாடு அரசால் துவங்கி வைக்கப்படக்கூடிய புதிய திட்டத்திலும் முதலமைச்சர் பெயரோ முன்னாள் முதலமைச்சர் படமோ இடம்பெற கூடாது அவ்வாறு இடம் பெற்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும், என நெல்லையில் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஐ எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அரசின் திட்டங்களில் முதல்வர் பெயர் இடம் பெறக் கூடாது என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் தீர்ப்பு வழங்கியுள்ளது.முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதி படமும் அதில் இடம்பெற கூடாது.நாளை தமிழ்நாடு அரசால் துவங்கி வைக்கப்படக்கூடிய புதிய திட்டத்திலும் முதலமைச்சர் பெயரோ முன்னாள் முதலமைச்சர் படமோ இடம்பெற கூடாது அவ்வாறு இடம் பெற்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்.
தேர்தல் ஆண்டாக இருக்கும் நிலையில் தனது பெயரை மக்களிடம் கொண்டு செல்ல 600 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்கிறது.விளம்பர அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது திட்டங்களுக்கு பணமில்லாமல் உள்ள நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் தேவையற்றது. ஆள்பவர்களுக்கு அடியார்களாக திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களான கம்யூனிஸ்ட் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை ஆகியோர் உள்ளனர்.சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து காவல்துறையை குறைத்து சொல்ல முடியாது அரசன் எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியிலேயே செயல்படுகிறார்கள். நிர்வாகத் திறனற்ற முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் உள்ளார்.
பல இடங்களில் காவல்துறையினர் செயல்பட முடியவில்லை, சில இடங்களில் கூடுதல் செயல்பாட்டுடன் இருப்பதால் அஜித் குமார் கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது.தமிழக சபாநாயகர் உலக அரசியல் பேசுவார் அவருடைய சொந்த தொகுதியில் தண்ணீர் இன்றி மக்கள் பரிதவிக்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு டிஜிபிக்கள் உள்ளனர் திருநெல்வேலி டிஜிபியாக சபாநாயகர் செயல்படுகிறார். தமிழகத்தின் மறுக்கப்பட்ட மாநில உரிமைகள் கல்வி, காவிரி கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டது ஆகியவற்றை மீட்பதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.
திருநெல்வேலிக்கு புதிய ரயில்வே கோட்டம் கன்னியாகுமரி ராமநாதபுரம் நான்கு வழி சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். அதிமுக பொதுச் செயலாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி என்ற நபர் கட்சியிலேயே இல்லை கட்சிக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.நீதிமன்றத்தில் வழக்கமாக வழக்கு தொடர்பவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுமோ அதே நடைமுறையை இவ வழக்கிலும் பின்பற்றப்படுகிறது. இதனால் பின்னடைவு ஏதும் இல்லை என தெரிவித்தார்.