சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே இரட்டை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10-நாள் உற்சவம் நடைபெறும் வழக்கம். அதன்படி நிகழாண்டு உற்சவம் கடந்த 25-ம் தேதி காப்புக் கட்டுகளுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக சட்டநாதர் சுவாமி கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்கள் எடுத்தும், பக்தர்கள் அலகு காவடிகள், பறவை காவடிகள் எடுத்தும் மேளதாளம் முழங்க, வான வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இரட்டை காளியம்மன் கோயிலை சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் .இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
