திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் 9 வது தேசிய சித்த மருத்துவ தின விழா கொண்டாடப்பட்டது .
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் சித்தா துறை சார்பாக 9 வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு விழாவாக கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் புதிய கூடுதல் கட்டிட வளாகத்திற்கு முன்பு சித்த மருத்துவ துறை சார்பாக மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டு மருத்துவ பெறுவதற்காக வருகின்ற நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சித்த மருத்துவத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒன்பதாவது தேசிய சித்த மருத்துவர் தினத்தை முன்னிட்டு மூலிகை தோட்டம் உள்ள பகுதியில் சித்த மருத்துவம் தொடர்பான மூலிகை தோட்டத்தில் உள்ள மூலிகைகளின் விளக்கங்களை சித்த மருத்துவர் உமேரா அவர்கள் சக மருத்துவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டினார்.














