விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1956 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயின்ற N. குலசேகரன் அவர்கள், தனது 85வது வயதில், தனது அறநெறி ஆசிரியராக இருந்த 93 வயதுடைய G. இராஜசேகர் அவர்களை அவரது இல்லத்தில் ஆடி பெருக்கு நன்நாள் அன்று சந்திக்க சென்றார்.
குருவை பார்த்தவுடன், பெருமகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆசிரியர் முன்னிலையில் குலசேகரன் அவர்கள் சாஸ்டாங்கமாகக் காலில் விழுந்து குருமரியாதை செலுத்தினார். முதுமை வயதில் இந்த சந்திப்பு மிகுந்த நெகிழ்ச்சியையும், மாணவ-குரு பாசத்தின் அழகையும் வெளிப்படுத்தியது.
இந்த சந்திப்பின் போது, “அடியேன் இவர்களிடம் படித்தேன்” எனக் கூறிய ஒருவர் ஏற்பாடு செய்ததின் பயனாக, இருவரும் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு கூட்டாக ஆசியுரை வழங்கியதும் சிறப்பம்சமாக இருந்தது.
