மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான எழுந்தருளி இருக்கும் 900 ஆண்டு தொன்மை வாய்ந்த அருள்மிகு சுந்தர நாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில். உள்ளது. இக்கோவில் பரணி நட்சத்திர பரிகாரம் பெற்ற சிறப்பு மிக்க தலமாக விளங்கி வருகிறது.
மார்கண்டேயரை பெற மிருகண்ட மகரிஷி தவமிருந்த தலம், இந்திரன் மகாவிஷ்ணு பூஜித்த தலம்,சோழ மன்னனுக்கு பிரமஹத்தி தோஷம் நிவர்த்தியான இத்தலம் ஆகும்,இத்தலத்தில் கணவர் மனைவி ஒற்றுமைக்கும் மற்றும் தோஷம் நீங்கும் தலமாக இருப்பது சிறப்பானதாகும்.
இப்படி பல்வேறு சிறப்பு கொண்ட இக்கோவிலுக்கு இன்று இரவு பெருஞ்சேரி தாருகவன சித்தர் பீடம் , குழுமத்தினரான வினோத்குமார். தலைமையில் ரஷ்யா,கஜகஸ்தான், ,ஜெர்மனி, இந்தோனிஷியா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 15 பேர், கொண்ட வெளிநாட்டினர் வந்து சாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு சிசேல்ஸ் நாட்டின் தொழில் அதிபர் கருணாநிதி தலைமையில் அதிர்வேட்டு முழங்க பெண்கள் இருபுறமும் நின்று மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அக்னீஸ்வரர் மற்றும் சுந்தர நாயகி சாமிகளுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது வெளிநாட்டினர் சாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டது. அப்போது கிராம மக்களுக்கு கோயில் வளாகத்தில் வெளிநாட்டினர் உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.

















