தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் மறைந்த பாமக கிளை செயலாளர் சுரேஷின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மலர தூவி மரியாதை செலுத்தினர்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பெருமாள் கோவில் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் திருக்கடையூர் கிளை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் சுரேஷின் நினைவை போற்றும் வகையில் திருக்கடையூரில் மார்பளவில் சிலை அமைத்து மணிமண்டபம் கட்டிய ஆண்டுதோறும் பிறந்ததினம், நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பாமக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி.பழனிச்சாமி கலந்து கொண்டு சுரேஷின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து வீரவணக்கம் செலுத்தி முழக்கங்களை எழுப்பி மௌனஞ்சலி செலுத்தினர். இதில் தெற்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் நடராஜ், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பசுபதி, மாவட்ட துணை செயலாளர் செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய தலைவர் பி.கே.தமிழ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
