திண்டுக்கல் பி.வி.கே. மஹாலில் இன்று நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார். மேலும், 4,506 பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவின் தொடக்கமாக அமைச்சர் கூட்டுறவு கொடியேற்றி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ.பெ. செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ச. காந்திராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. ஜெயபாரதி திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் மாவட்ட வழங்கல், கூட்டுறவு மற்றும் பால் உற்பத்தி துறைகள் சார்ந்த அலுவலர்கள் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவுத் துறை வழியாக அனைத்து நலத்திட்டங்களும் தடையின்றி செயல்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் மொத்தம் 295 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. முதல்வர் ஆட்சியேற்ற பின் கீழ்க்கண்ட 13 பகுதிகளில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் துவக்கப்பட்டன: கீரனூர், தாழையூத்து, வாகரை, கொழுமங்கொண்டான், கப்பல்பட்டி, கொத்தயம், முத்துநாயக்கன்பட்டி, சிந்தலைப்பட்டி, வடகாடு, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, எரமநாயக்கன்பட்டி, வெரியப்பூர். ▪ விவசாயிகளுக்கான தள்ளுபடி 45,145 விவசாயிகள் ரூ. 525.90 கோடி கடன் தள்ளுபடி மாநில அளவில்: 12,55,233 பயனாளிகள் – ரூ. 4818.88 கோடி திண்டுக்கல் மாவட்டத்தில்: 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி தள்ளுபடி. 31 முதல்வர் மருந்தகங்கள் திண்டுக்கலில் செயல்படுகின்றன. கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடக்கம். ஆத்தூரில் கூட்டுறவு கலை & அறிவியல் கல்லூரி துவக்கம். காளாஞ்சிபட்டியில் அரசு குடிமைப்பணி பயிற்சி நிலையம் ஆரம்பித்து, மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாளர் இரா. சுபாஷினி, துணைப்பதிவாளர் பி. உஷா நந்தினி, பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் க. வாணீஸ்வரி, நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. அன்பழகன், துணை மேயர் ச. ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
72-வது கூட்டுறவு வார விழா: ரூ.50.03 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி
-
By sowmiarajan

Related Content
கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி
By
Satheesa
May 5, 2026
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை
By
Satheesa
May 5, 2026
மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி
By
Satheesa
May 5, 2026