தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு 12 தொழில் பிரிவில் ஏழு நாள் பயிற்சி அளிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆணை வெளியிட்டுள்ள நிலையில், மகாகவி பாரதியார் கட்டிடம், மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்த்தின் மாநில தலைவர் தனலட்சுமியின், முயற்சியால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று விளிம்பு நிலையில் உள்ள கட்டுமான கொத்தனார், எலக்ட்ரிஷன், கார்பெண்டர், என ஆண், பெண், உள்ளிட்ட 1100 தொழிலாளர்களை கண்டறியப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் விதமாக அம்பத்தூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு ஏழு நாள் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன, அதன் தொடர்ச்சியாக பத்தாவது கட்டமாக 119 தொழிலாளர்களுக்கு தேறி, மற்றும் (practical) பிராக்டிகல், செயல் முறைகளை பயிற்சியாக அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அதன் தொடர்ச்சியாக ஏழாவது நாள் நிறைவு விழாவில் தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்கு
புத்தாடைகள், வழங்கியும் சால்வை அணிவித்து, தாம்பூலம் தட்டில் பழங்களை வைத்து மரியாதை செலுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தொழில் பயிற்சி நிலைய (principal) டாக்டர் தனியரசு, கட்டுமான தொழிலாளர்கள் கற்றுக்கொண்ட ஏழு நாள் பயிற்சின் மூலமாக ஒவ்வொரு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தமிழக அரசு எது மாதிரியான சலுகைகள் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது, என்பதைக் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த பயிற்சியில் பங்கு பெற்ற ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் உடன் 50,000 மானிய தொகை கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக மகாகவி பாரதியார் கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்த்தின் மாநிலத் தலைவி தனலட்சுமி,
தெரிவித்துள்ளார்.
















