முருகனைப் பற்றி திருப்புகழ் பாடிய முருக பக்தர் அருணகிரிநாதரின் 655 ஆம் ஆண்டு விழா மற்றும் கிருபானந்தாவாரியாரின் 119 ஆம் ஆண்டு விழா. பரதநாட்டியத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாரியார் சுவாமி தம்பி மகன் புகழனார் பங்கேற்று சொற்பொழிவாற்றினார்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு ஆராயத் தெருவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருக பக்தர் அருணகிரிநாதர் சேவா சங்கம் சார்பில் 14 ஆம் நூற்றாண்டில் முருகனைப் பற்றி திருப்புகழ் பாடிய முருக பக்தர் அருணகிரிநாதரின் 655 ஆம் ஆண்டு விழா மற்றும் கிருபானந்தாவாரியாரின் 119 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கேயநல்லூர் வாரியார் சுவாமி அவர்களின் தம்பி மகன் புகழனார் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். இதில் நடைபெற்ற சிறுவர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பின்ன செய்தியாளர்களிடம் பேசிய புகழனார் கூறியபோது கடந்த ஆட்சி காலத்தில் கிருபானந்தா வாரியார் அவதரித்த நாளினை அரசு விழாவாக அறிவித்தனர். தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஆட்சியிலும் அனைவரும் கிருபானந்தா வாரியாவின் அவதரித்த நாளினை சிறப்பாக நடத்தி வருவதாகவும் , இதற்கு திமுக அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
