இராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம், தொன் போஸ்கோ வேளாண் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

இதில் இளங்கலை வேளாண் மாணவர்கள் 112 பேருக்கும், வேளாண்மையில் 92 டிப்ளமோ மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி கௌரவிக்கும் விழாவை அதன் என் போஸ்கோ வேளாண்கல்லூரிவளாகத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்துபின்னர் சிறப்பு அழைப்பாளர்களால் குத்து விளக்கு ஏற்றி, கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவையின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் வி. பாலசுப்ரமணி கலந்து கொண்டார். சகாயத்தோட்டம் தொன் போஸ்கோ வேளாண் கல்லூரியின் செயலாளர் அருட்தந்தை அல்போன்ஸ் அருளானந்தம் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் கே. சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் அருட்தந்தை அல்போன்ஸ் அருளானந்தம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் கே. சேகர் , அனைவரையும் வரவேற்று 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையை வாசித்தார். கல்லூரியின் செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் சிறப்பு உழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
கல்லூரியின் செயலாளர் அருட்தந்தை அல்போன்ஸ் அருளானந்தம் பாராட்டுரை வழங்கினார். சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் வி. பாலசுப்ரமணி இவ்விழாவினை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்தின் முழு முயற்சியை பாராட்டினார். பட்டப்படிப்புக்குப் பிறகு நிலைமை என்னவாக இருக்கும், வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பட்டதாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பட்டதாரிகள் அவரது உரையால் மிகவும் ஈர்க்கப் பெற்றனர்.
உரைக்குப் பிறகு, பட்டப்படிப்பு படிப்பின் போது மாணவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை சிறப்பு விருந்தினர் வழங்கினார், அதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கூடியிருந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் இளங்கலை மற்றும் டிப்ளோமா பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.
தேசிய கீதம் பாடி, பட்டதாரிகள் பிரமுகர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது. DBCA-வின் முன்னாள் மாணவராக இருப்பதன் முக்கியத்துவத்தைக் எடுத்துரைக்க கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சந்திப்பும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.

Exit mobile version