சென்னை மாதவரம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய திருவிழாவானது இந்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது ஒவ்வொரு நாளும் அன்னைக்கு ஆராதனை திருப்பலி தேர்பவனி என பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது அதன் ஒன்பதாம் நாள் திருவிழா இன்று ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற்றது தேர் பவனி ஆனது ஆலய வளாகத்தில் இருந்து துவங்கி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பவணியாக வலம் வந்தது மேலும் ஆடம்பர தேர் பவனி வருகையில் வீதி எங்கும் பக்தர்கள் அன்னைக்கு மெழுகுவர்த்தி ஆரத்தி எடுத்தும் ஊதுவத்திகளும் மற்றும் மலர்மாலைகள் வைத்து வழிபட்டனர் இவ்விழாவில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவணியை கூட்டுத் திருப்பலியும் சிறப்பித்தனர்
இன்று நடைபெற்ற ஆடம்பர தேர் பவணியை மற்றும் திருப்பலியை பங்குத்தந்தை அருள் செல்வம் மற்றும் அந்தோணிசாமி அவர்கள் கலந்து கொண்டு திருப்பலியை சிறப்பாக நிறைவேற்றினார்

















