மதுரை மாநில மாநாட்டுக்காக மேலும் 5 குழுக்கள் அமைப்பு – நடிகர் விஜய் அறிவிப்பு

மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநில மாநாட்டின் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், கட்சித் தலைவர் நடிகர் விஜய் மேலும் 5 குழுக்களை அமைப்பதாக அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் மாநாடு நடைபெறும் என்று தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு காரணங்களால் மாநாட்டுத் தேதியை மாற்றுமாறு காவல்துறை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் ஏற்பாட்டு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பகுதியாக, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது – வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” எனும் மாநில மாநாட்டிற்காக புதிய 5 குழுக்களை அமைத்துள்ளதாக கட்சியின் எக்ஸ் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version