நாளை முதல் தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில் 5 % கட்டண உயர்வு: பாஜக அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு

நாளை முதல் தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் கட்டண உயர்வு: சுங்கசாவடி கட்டண உயர்வுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா கண்டனம் தமிழகத்தை தொடர்ந்து பாஜக அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு.

பேட்டி:- எம்.எச். ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி .

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நாகை சட்டமன்ற வேட்பாளரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுக்கிறார். இந்த நிலையில் நாகை தொகுதி வேட்பாளர் ஜவாஹிருல்லா இன்று தொகுதிக்கு வருகைதந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து நாகை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் 5% கட்டண உயர்வு என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசால் தமிழக மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அறிவித்துள்ள கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் பேருந்து கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் ஏற்கனவே விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தற்போது கட்டண உயர்வு மேலும் தமிழக மக்களை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கும் அதற்கு துணை போகும் அதிமுக அரசுக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

Exit mobile version