சீர்காழி கோழி கூண்டில் புகுந்து 5முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு

சீர்காழி அருகே கோழி கூண்டில் புகுந்து கோழியை கொன்று விட்டு, 5 முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு மீட்பு .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் மதகடி பகுதியில் எஸ்தர் நாகலிங்கம் என்பவர் வீட்டில கோழிக்கூண்டில் கருநாகம் பாம்பு புகுந்து கோழியை கொன்று கூண்டில் இருந்த 5 கோழி முட்டைகளை முழுங்கு விட்டு கூண்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து சீறியது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் சீர்காழி பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு. பாண்டியனுக்கு தகவல் அளித்தார். அதன்படி அன்று விரைந்து சென்ற பாம்பு.பாண்டியன் கோழி கூண்டில் சிக்கி இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட கருநாகப் பாம்பை லாவகமாக பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

Exit mobile version