உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான லட்சுமணன் துவக்கி வைத்தார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளில் 49 நாட்கள் தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து இன்று விழுப்புரம் வள்ளலார் மாளிகையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளருமான லட்சுமணன் 49 நாட்கள் அனைவருக்கும் பசியாறும் விதமாக உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், விழுப்புரம் நகர மன்ற தலைவி தமிழ்ச்செல்வி பிரபு, நகர செயலாளர் வெற்றி, நகர மன்ற உறுப்பினர்கள் மணவாளன். வசந்த அன்பரசு. புருஷோத்தமன் .உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version