தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 48 மணி நேர பணிப் புறக்கணிப்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 48 மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் சூழலில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட மொத்தம் ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் 270-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பல அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

Exit mobile version