நாகை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாகை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் 4 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் விஜயை வரவேற்று உரையை கேட்டனர். அந்த நேரத்தில் சுமதி என்ற பெண்ணின் பையில் வைத்திருந்த 4 சவரன் செயின் காணாமல் போனது.
அவர் தனது மகளுக்காக சேர்த்து வைத்த நகை என்பதால், அதைப் பறிகொடுத்த துயரத்தில், “எப்படியாவது என் நகையை மீட்டுக் கொடுங்கள்” என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
சம்பவத்துக்குப் பிறகு, கூட்டத்தில் இருந்த வடமாநில வாலிபர் ஒருவரை சில தவெக தொண்டர்கள் சந்தேகத்தின் பேரில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரிடமிருந்து நகை எதுவும் மீட்கப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். விசாரணைக்குப் பிறகே உண்மை நிலை தெரியவரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
