திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தம்பதியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சங்கர்–நதியா என்ற தம்பதியிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற சம்பவத்தை தொடர்ந்து, சங்கர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது பிரகாஷ், பிரவீன், லெனின்குமார், பாலாஜி ஆகிய நான்கு பேரென தெரியவந்தது.
இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் பணமும் மீட்கப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடி போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
















