சிட்னி :
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 237 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களையும் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியா, இன்று சிட்னியில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மேத்யூ ஷார்ட் 30 ரன்கள், ரென்சா 56 ரன்கள் என சிறு, சிறு பங்களிப்புகள் அளித்தனர். ஆனால் மத்திய வரிசை வீரர்கள் விரைவில் அவுட் ஆனதால், ஆஸி அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய பந்து வீச்சாளர்களில் ஹர்ஷித் ராணா சிறப்பாக விளங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து, வெற்றி பெற இந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடரை இழந்துள்ள இந்தியா, இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறுமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















