விழுப்புரத்தில் 380 வங்கிகிளைகள் மூடப்பட்டு1800-கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தபோராட்டம் 400கோடி பணபரிவர்த்தனை முடங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் 380 வங்கி கிளைகள் மூடப்பட்டு 1800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

400 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கியது

வங்கி ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஏற்கனவே அறிவித்திருந்தது, அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மண்டல செயலாளர் பாலமுரளி தலைமையில் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 380 வங்கி கிளைகள் மூடப்பட்டு இதில் பணியாற்றும் 1800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்

வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை நாளொன்றுக்கு கூடுதலாக 40 நிமிடம் பணி செய்யவும் தயார், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் இந்த கோரிக்கையில் வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது, இதில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வங்கி ஊழியர்கள் எஸ்பிஐ வங்கி முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்பும் மத்திய அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள போவதாகவும் கூட்டமைப்பின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வங்கியின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 400 கோடி அளவில் பண பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளது முடங்கியுள்ளது இதனால் பொதுமக்கள் களம் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்

Exit mobile version