மயிலாடுதுறையில்  பள்ளிவேன் விபத்து 27 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் ஐடியல் சி.பி. எஸ்.இ பள்ளி உள்ளது. ப்ரீ கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று காலை பள்ளிவேன் பள்ளியிலிருந்து புறப்பட்டு நீடூர் வரை சென்று 33 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. வேனை பள்ளி வேன் ஓட்டுநர் மஞ்சள் வாய்க்காலை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஓட்டிச் சென்றார். வேன் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி வேன் பின்னால் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த மற்றொரு தனியார் வேன் மோதியதில் சிபிஎஸ்சி பள்ளி 27 மாணவர்களுக்கு உள் காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அறிந்து பெற்றோர்கள் பதறி துடித்து மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் மருதவாணன் தலைமையில் மருத்துவர்கள் மாணவர்களுக்கு எங்கெங்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய வேனில் சென்ற மாணவர்களுக்கு எந்த காயமும் இல்லை. அதன் ஓட்டுனர் ஆனந்த தாண்டவபுரம் ஆர்க்காடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Exit mobile version