திருவாரூர் விளமல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு

திருவாரூர் விளமல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ஏர் பலூன் வெளியாகி உயிர் சேதம் தவிர்ப்பு.

இருதய சிகிச்சை மேற்கொள்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் நபர் சென்ற கார், திருவாரூர் விளமல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது , எதிரே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து திருவாரூர் நகரை நோக்கிச் சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கார் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் இறங்கியது. எதிர்பாராத இந்த திடீர் விபத்தால் இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்தன. அதே சமயத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்ததன் காரணமாக ஏர் பலூன் வெளியாகி காரில் இருந்தவர்கள் சிறு சிறு காயங்களோடு உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் திருவாரூர் தஞ்சை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்த நிலையில் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Exit mobile version