விழுப்புரத்தில் மாவட்ட அளவினா தடகள போட்டியில் 1500 வீரர்கள் பங்கேற்பு
நவீன சிந்தடிக் மைதானம் அமைத்து தரவேண்டும் என தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்னுசாமி கார்த்தீக் தமிழக அரசுக்கு கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் 49வது ஜூனியர் தடகள போட்டி இன்று காலை தொடங்கியது. போட்டியினை விழுப்புரம் மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக் தொடங்கி வைத்தார். மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 20 வயதிற்குட்பட்டோர் சுமார் 1800க்கும் மேற்பட்டோர் பேர் பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று நடைபெற்ற தடகள போட்டியில் 1500 மாணவர்கள் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 100 மீட்டர் ஓட்டபந்தம், 200 மீட்டர் ஓட்டபந்தயம், ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் என மொத்தம் 104 பிரிவுகளில் போட்டுகள் நடைப்பெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம், ரொக்கபரிசு ஆகியவை வழங்கப்பட்டன.
மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகை தொகை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைக்கு வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்பொழுது விழுப்புரம் மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், விழுப்புரம் மாவட்ட தடகள சங்க செயலாளர் மணிவண்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்

தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் தடகள சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறும்போது,
இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் 100 மாணவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சிறப்பு பயிற்சி மாவட்ட தடகள சங்கம் வழங்க உள்ளது. விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத்தின் முக்கிய குறிக்கோளாக இந்த மாவட்டத்தில் இருந்து ஒலிம்பிக் மற்றும் தேசியப் போட்டிகளில் மாணவர்களை வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதே. மேலும் கிராமத்தில் உள்ள திறமையான மாணவர்களே கண்டறிந்து அவர்களுக்கு முழுமையாக இலவச பயிற்சி அளித்து சாதனையாளர்களாக உருவாக்க உள்ளோம்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தவோ, பயிற்சி பெறவோ முடியாத நிலையில் இருப்பதால் சிந்தடிக் மைதானம் அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து பேட்டி: பொன்னுசாமி கார்த்தீக், மாவட்ட தடகள சங்க தலைவர்
















