உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் 15 வயது சிறுவன் ஒருவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் அமேதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். ஜூலை 18-ம் தேதி மாலை, அதே கிராமத்தைச் சேர்ந்த நிதின் (23) மற்றும் ரோஹித் (24) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சிறுவனை அழைத்து சென்றதாக, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் சிறுவனை அருகிலுள்ள வேறு ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று, முதலில் அடித்து தாக்கியதுடன், பின்னர் தோட்டமொன்றில் அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், பஜார் ஷுகுல் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என எஸ்.எச்.ஓ அபினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் கிராமம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.