தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TABCEDCO), மூலம் கடன் பெற்று ஆழ்துளை கிணறுகள் அமைத்த 140 விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் விலையில்லா மின்சாரம் வழங்காத காரணத்தால், வங்கி கடனுக்கு வட்டி கட்டுவதற்கு விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயி குற்றச்சாட்டு. புகையான் நோய் தாக்குதலால் சேதமடைந்த நெற்பெயர்களை கையில் கொண்டு வந்து விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சி இடம் காட்டி நிவாரணம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைந்த தீர்ப்பு நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தனியார் மணல் குவாரிகள் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம் சாட்டினர். கடும் பனிப்பொழிவு காரணமாக விவசாய பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டிய நிலையில், நோய் தாக்கிய பயிர்களை கையில் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வேதனை அடைந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற்று ஆழ்துளை கிணறுகள் அமைத்த விவசாயிகள் 140பேருக்கு விலை இல்லா மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால், விவசாயிகள் வங்கி கடனை கட்ட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் உரக்கடைகளில் போலி மருந்துகள் விற்பனையாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
