12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் பாகம் – 3

துலாம்

அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர்  ஸ்ரீஷப்ர ப்ரஸாத கணபதி


விருச்சிகம்

இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தை செய்துமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஸ்ரீசக்தி கணபதி

தனுசு

பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு ஸ்ரீசங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.

Exit mobile version