கடகம்
பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஸ்ரீ ஹேரம்ப கணபதி

சிம்மம்
இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஸ்ரீவிஜய கணபதி

கன்னி
இயற்கையில் பெண்மை குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் ஸ்ரீமோகன கணபதி

















