மகரம்
சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் ஸ்ரீயோக கணபதி.

கும்பம்
அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் நீங்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்று வெளிக்காண்பிக்காமல் செயல்படுவீர்கள். அதேநேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஸ்ரீசித்தி கணபதி

மீனம்
இயற்கையில் கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள், தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் ஸ்ரீபால கணபதி


















