நடிகர் ரஜினிகாந்த் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபாடு செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது :-
தமிழக திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 108 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இளநீர் திரவிய பொடி
, மாப்பொடி, மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் டி.எல் ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் சிறப்பு அன்னதானம் ரஜினி ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்டது.
