திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மனுக்கு தைஅம்மாவாசையை முன்னிட்டு 1008 பால்குட அபிஷேகம்

பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மனுக்கு தை அம்மாவாசையை முன்னிட்டு பால் அபிஷேகம்.1008 பால் குடங்கள் ஏந்தி திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இங்கு அபிராமி அம்மன் சேவை குழுவின் சார்பாக தை அம்மாவாசையொட்டி அம்பாளுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடைபெற்றது. திருக்கடையூர் ஆனைக்குளம் ஸ்ரீ காளிஸ்வரர் கோவிலிருந்து 1008 பால்குடங்கள் ஏந்தி 2000 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பிரமாண்ட ஊர்வலம் வந்து கோவிலை அடைந்தனர்.அப்போது தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கி வரவேற்றார். பின்னர் பால் குடங்களுடன் பக்தர்கள் அபிராமி அம்மன் சன்னதியை வளம் வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Exit mobile version