ஆம்பூர் அருகே ஆயிரம் இளைஞர்கள் சேர்ந்து பிரதிபலன் எதிர்பார்க்காமல் நடத்தும் குருதி கொடை அறக்கட்டளை சார்பாக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 40 விடுதி மாணவியருக்கு குளிர்கால பாதுகாப்பு உடை மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து செயல்பட்டு வரும் குருதி கொடை அறக்கட்டளை சார்பாக இலவச ரத்த தானம் சாலையோரம் வசிக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்குதல் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்
அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல நற்பணிகளை நன்கொடை ஏதும் வசூல் செய்யாமல் சொந்த செலவில் ஆர்வமுடன் செய்து வருகின்றனர் இந்த சமூக பணிகளின் ஒருபகுதியாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தென்னம்பட்டு பகுதியில் சுவாமி தயானந்தா எய்ம் பார் சேவா தயாதீர்த்த மாணவிகள் சத்ராலயத்தில் உள்ள, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவிகள் கொண்ட விடுதி மாணவிகளுக்கு தற்போது குளிர் காலம் என்பதாலும், குளிரின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருப்பதாலும் மாணவிகள் உடல் நலன் மற்றும் கல்வி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குளிருக்கு பாதுகாப்பாக ஸ்கார்ஃப், துண்டு, ஸ்வட்டர்,பேனா, காலை சிற்றுண்டி இனிப்புகள் ஆகியவை ‘குருதி கொடை அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் குருதி அறக்கட்டளை நிர்வாகிகள் தன்னார்வலர் மற்றும் இல்லத்தின் காப்பாளர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
