100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து வருகின்ற 30ஆம் தேதி திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்,
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கத்தூர், பகுதியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
அதில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்குப் பதிலாக ஒன்றிய பாஜக அரசு ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தப்பட்டு
அதில் மகாத்மா காந்தியடிகளின், பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக
விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என்று பெயர் மாற்றம் செய்துள்ளதால்,
பெயர் மாற்றம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூர் தலைநகரில் வருகின்ற 30 ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும்,.
இதில் 100 நாள் பணியாளர்கள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்
அதைத் தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸில் மாவட்ட தலைவர் பதவி கிடைக்காதவர்கள் சிலர் விரத்தியால் பொய்யான விமர்சனங்களை தன்மீது வைத்து அரசியல் செய்து வருவதாகவும்
காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அளவில் ஆட்கள் இல்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி பேசியது தவறு என்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது
என்றார்
திமுக தலைமை சட்டமன்ற உறுப்பினர் தளபதி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்,
பூத் கமிட்டியில் காங்கிரசுக்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தளபதிக்கு
தெரிவிப்போம் என்றார்
தான் தலைவர் பதவியை பெற்று விட்டதால் சிலர் அதை கிடைக்காமல் உள் ஒன்று
வைத்தஆர்ப்பாட்டத்தில்
பேசி வாயை வாடகை விட்டு பிழைப்பு நடத்தி வருவதாகவும் விமர்சனம் செய்தார்
