மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு முறத்தில் மங்களப் பொருட்கள் வைத்து மகா தீபாராதனை. வெள்ளி ரதத்தில் அபயாம்பிகை அம்மன் வலம் வந்தது:-
மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமாயூரநாதர் ஆலயம் உள்ளது. இங்கு ஸ்ரீஅபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராண வரலாறு கூறும் இக்கோயிலில் ஆடிப்பூர விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீஅபயாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு முறத்தில் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி ஆலய பிரகார வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து மங்களப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.
