அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என தேர்தல் பிரச்சார பயணத்தை கடந்த 7ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார் அதைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல்நாயகி உடலுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலில் எடப்பாடி பழனிச்சாமி 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி சுவாமி அம்பாள் அங்காரகன் செல்லமுத்துக்குமார் சுவாமி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து மனம் உருகி வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தரிசனம் முடித்த எடப்பாடி பழனிச்சாமி அவரது மகன் மிதுன் மற்றும் அவரது உறவினர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதம் வழங்கினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ் சக்தி ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அம்மா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன. இருந்தனர்.