இன்று விழுப்புரத்தில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில்
அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை விழுப்புரத்தில் சந்தித்தார் அப்போத அவர் கூறுகையில் வள்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் கருணை கொலை ஏற்புடையது அல்ல தமிழக அரசு தற்பொழுது வெறி நாய்களை கருணை கொலை செய்ய ஆணை பிறப்பித்துள்ளது இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் பெயரில் பல்லுயிர் காப்பகம் துவங்கியுள்ள நிலையில் தற்போது இது போன்ற நடவடிக்கை எடுப்பது வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் ஏற்புடையது இல்லை கொல்லா நெறியை பின்பற்றும் வள்ளலார் பக்தர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தனர் கொரோனா போன்ற கொடிய நோய்கள் தாக்கும் பொழுது அரசு அதற்கான மாற்று நடவடிக்கையாக சிகிச்சை அளிக்கும் முறையை பின்பற்றியது இது போன்ற கருணை கொலை நடவடிக்கை எடுக்கவில்லை அதேபோல் வெறி நாய்களை கருணை கொலை செய்யும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மாறாக சிகிச்சை முறையில் கால்நடை துறை மூலம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மது கடைகளால் கொலை வெறி தாக்குதல் நடைபெறுகிறது அதனை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு இதனை திரும்பப் பெறாவிட்டால் வள்ளலார் சன்மார்க்க சார்பில் ஆர்ப்பாட்டம் போராட்டம் உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளும் தொடரப்படும் என்று தெரிவித்தார்
