விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாற்று நடும் நூதனப் போராட்டம்

குமரி மாவட்டத்தில் சானல் உடைப்புகளை சரி செய்து விவசாயத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தவறியதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதை ஒட்டி இன்று நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்திலிருந்து விவசாயிகள் ஏராளமானோர் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததற்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில்,
1950ம் ஆண்டில் 55,000 ஹெக்டேர் விவசாய நிலத்தில் இரு போக சாகுபடி நடைபெற்று வந்த நிலையில் தற்போது 6 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் மட்டும் விவசாயம் நடைபெறுவதாகவும் விளைநிலங்கள் சுருங்குவதற்கு மிக முக்கிய காரணம் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் செல்லாததாகும் எனவும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்ததாகவும் குற்றம் சாட்டினார் பல சேனல்களில் உடைப்பு ஏற்பட்டபோது உரிய நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்காததால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதாகவும் அனந்தனார் சேனலில் உடைப்பு ஏற்பட்டபோது அதை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்திய போது சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியதால் அதை நம்பி விவசாயம் செய்ததாகவும் ஆனால் போதிய தண்ணீர் வராததால் விவசாயிகள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் தங்களுக்கான இழப்பீடு கூட தரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். சேனல் உடைப்புகளை சரி செய்யவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை வழிநடப்பு செய்துள்ளதாக கூறிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்

Exit mobile version