விழுப்புரம் நகர பகுதிகளான மகாராஜபுரம், தாமரை குளம், கம்பன் நகர், திரு நகர், அரசு குடியிருப்பு பகுதி, உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களில் நாய்கள் அதிகரித்து இருப்பதும், பல இடங்களில் வெறி நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஜபுரம், தாமரை குளம், அரசு குடியிருப்பு பகுதிகளில் இன்று மாலை 3 வெறி நாய்கள் மக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. நாய் கடித்ததில் 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்தனர். உடனடியாக கீழ்ப்பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை
அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து விழுப்புரம் கீழ்பெறும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் மேலும் இச்சம்பவம் குறித்து நகராட்சி அதிகாரிகள்,மாவட்ட மருத்துவகுழு அதிகாரிகளிடம் பாதிக்கபட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் தெரு நாய்களை பிடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்
