விழுப்புரத்தில் நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவு செய்யக் கோரி தவெகா சார்பில் அமைதி பேரணி அனுமதி கோரி புகார்மனு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் A.விஜய்வடிவேல், நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுமதி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தனது மனுவில், பனமலை ஏரியில் தொடங்கி, அன்னியூர், கஞ்சனூர் வழியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடையும் அமைதி பேரணி, ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளார்.

பண்டைய நந்திவர்மன் அரசின் காலத்தில் உருவான நந்தன் கால்வாய் திட்டம், தொடர்ந்து காமராஜர் ஆட்சியில் மறுசீரமைக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு நீர்வரத்து வழங்கி வந்ததாகவும், தற்போது பல பகுதிகளில் பாழடைந்து, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாமல் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், திட்டத்தின் விரைவு அமலாக்கம், ஈச்சங்குப்பம் மற்றும் மண்டகப்பட்டு ஏரிகளை திட்டத்துடன் இணைத்தல், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 என உயர்த்தல், கரும்பு டனுக்கு ரூ.4000 என நிர்ணயித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம் பெற்றுள்ளன.

Exit mobile version