முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆண்களுக்கான பளுதூக்கும் பிரிவில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுடன் அமர்ந்து அவர் உணவு அருந்தினார்.