விமான டிக்கெட் கட்டணமும் கிடுகிடு உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதால், விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சொந்த ஊரில் தீபாவளி திருநாள் கொண்டாடும் மக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டு உள்ளன. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று காலை சென்னையில் இருந்து ஏராளமானோர், சொந்த ஊர் புறப்பட்டு சென்றதால், புறநகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதனிடையே, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை-டெல்லி இடையே வழக்கமான கட்டணம் 6 ஆயிரம் ரூபாய். தற்போது 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு, சாதாரண நாட்களில் 3 ஆயிரத்து 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இன்றைக்கு கட்டணம் 17 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதேபோல், மும்பை, திருச்சி, மதுரை, சேலம், ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும், விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்திருக்கிறது.

Exit mobile version