கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு என கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் மற்றொரு தளம் அமைப்பது தொடர்பான அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார் அவருடன் ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ் முத்துக்குமார் பேரூர் கழகச் செயலாளர் குமார், கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகசாயி, முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் அதில் கூறியதாவது.
கன்னியாகுமரி தொகுதி மலையோர பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக தெள்ளாந்தி, திடல், காட்டுபுதூர் போன்ற பகுதிகளில் யானை ஊருக்குள் வந்து விவசாய நிலங்களை அவ்வப்போது சேதப்படுத்தி வருகிறது யானை ஊருக்குள் வந்து செல்ல ஏதுவாக ஆங்காங்கே பாலம் கட்டப்பட்டுள்ளது அதில் முள் கம்பி போன்றவைகளை அங்கே வைக்கப்பட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது வன காவலர்கள் தினசரி சென்று அங்கு ஆய்வு மேற்கொள்கின்றனர் என்று தகவல் வந்துள்ளது. இருப்பினும் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தால் பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் அதே சமயத்தில் பொது மக்களை பாதுகாத்திட வேண்டும் இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .மேலும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் முதலமைச்சரிடம் முறையிட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது ராஜாக்கமங்கலம் அருகே புத்தன்துறை போன்ற கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பு பாதிப்பால் கடலோர மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் 2001 ஆம் ஆண்டு நான் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளபோது ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராமங்களுக்கு சுமார் 250 கோடி செலவில் தூண்டில் வளைவு கட்டப்பட்டுள்ளது தற்போது மேலும் தூண்டில் வளைவுகளை அமைப்பதற்காக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து உடனடி தீர்வுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முயற்சி செய்வேன் என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது அமைந்திருக்கும் அதிமுக பாஜக கூட்டணி எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக சென்று கொண்டுள்ளது என்று தெரிவித்தார்
