மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்குறைதீர்கூட்டத்தில் விவசாயி நேரடிகுற்றச்சாட்டு

இட தகராறு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி நேரடி குற்றச்சாட்டு. சீர்காழி தாலுக்காவில் லஞ்சம் கொடுத்தால்தான் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயி கூறியபோது வாக்குவாதம் செய்த வட்டாட்சியரை விவசாயிகள் சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி தரங்கம்பாடி குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து மனுக்களை அளித்தனர். இதில் பேசிய கொள்ளிடத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்ற விவசாயி இடத்கறாறு தொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும், மாவட்ட ஆட்சியரிடமும் நேரடியாக மனுக்கள் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஆன நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் நான் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக குற்றம் சாட்டி நேரடியாக புகார் தெரிவித்தார். கோர்டில் பார்த்துகொள்ளுங்கள் என்று அப்போது கூறாமல் இப்போது ஏன் கூறுகிறிர்கள் என்றும், எதற்காக மனுக்களை பெறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் தான் மனுவே நகர்கிறது என்றும் முறைகேடு நடைபெறுவதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் லஞ்ச ஒழிப்புதுறையால் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்த நிலையில் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி எழுந்து நின்று புகார் தெரிவித்த விவசாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விவசாயிக்கு ஆதரவாக மற்ற விவசாயிகள் எழுந்து நின்று வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சமே வாங்கவில்லையா என்று கேள்வி எழுப்பியதால் குறைதீர் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர். பெரும்பாலான விவசாயிகள் அளித்த மனுவிற்கு நடவடிக்கையும் உரிய பதிலும் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version