தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம். யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல், இதில் ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவது வரத்தமளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மயிலாடுதுறையில் பேட்டி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொடக்கப்பள்ளி, நுடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 488 தலைமையாசியர்கள் பங்கேற்றனர். மாணவர்களை வழிநடத்தும் முறைகள், பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, கற்றல், கற்பித்தல், அடைவுத்தேர்வு தொடர்பாக தலைமையாசிரியர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
உடற்கல்விக்கான பாடத்திட்டத்துக்கான புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின்னர் விளையாட்டு, மனம், உடல் சார்ந்த்து பிள்ளைகள் எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகுப்புகள் நடத்தப்படும். இந்த கல்வியாண்டிலேயே இது அமல்படுத்தப்பட்டுவிடும். கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை தமிழக ஆளுநர் எந்தவொரு கருத்தும் கேட்காமல் வெறுமனே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டிய சூல்நிலைதான் உள்ளது.
கண்டிப்பாக நீதிமன்ற ஒரு நல்ல தீர்ப்பை தமிழக அரசுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் பெயருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்டபோது, தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம். யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல், இதில் ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்வது வருத்தமாக உள்ளது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டம் என்றுதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அம்மா உணவகம் என்ற பெயரில்தான் தொடர்ந்து அதனை செயல்படுத்தி வருகிறோம். மக்களிடம் நன்றாக சென்றடைந்துவிடும் என்ற பயத்தின் காரணமாகத்தான் அவர் இவ்வாறு செய்கிறார் என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல மாதங்களாக முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது குறித்து கேட்டதற்கு, அதிக அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அடுத்து பணி உயர்வு பட்டியல் வரவுள்ளது.
அப்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கண்டிப்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நியமிக்கப்படுவார் என்றார். இவ்வாய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இணை இயக்குநர் (பள்ளிக்கல்வித்துறை) பூபதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் .அன்புமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) குமரவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியார் முத்துக்கணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.